கிராமாலயா - தூய்மை தமிழ்நாடு திட்டம்
கிராமாலயா - தூய்மைத் தமிழ்நாடு திட்டம் அறிமுகம்: சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், நலவாழ்வு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை எவ்வித பாலின பாகுபாடின்றி அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே கிராமாலயாவின் தொலைநோக்குப் பார்வை ஆகும். நவீன (ஸ்மார்ட்) தனிநபர் கழிப்பறை நவீன (SMART) கழிப்பறை என்றால் *Safe and Sustainable –சுகாதாரமான மற்றும் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக்கூடியது. *Maintanable - எளிதில் பராமரிக்கக்கூடியது *Affordable - எல்லோரும் கட்டிப் பயன்படுத்தக்கூடியது. *Recyclable- கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாகப்பயன்படுகிறது *Technically Perfect- சரியான தொழில் நுட்ப வசதியுடன் கூடியது நவீன கழிப்பறையின் முக்கிய அம்சங்களாவன: *குளியலறையுடன் கூடிய கழிப்பறையை குடும்ப உறுப்பினர்கள் எல்லா சுகாதார செயல்பாடுகளுக்கும் குறிப்பாக தன் சுத்தம் பேணுவதற்கும், பயன்படுத்துவதற்கும் எளிது. *கழிப்பறையாகப் பயன்படுத்தலாம். சோப்புடன் கூடிய கை கழுவும் வசதிகள் இருக்கும். *கழிப்பறைக்குள் சுகாதாரம் சம்மந்தப்பட்ட பற்பசை, பிரஷ், சோப், ஷாம்பு போன்ற எல்லா பொருட்களும் இரு...