Posts

Showing posts from September, 2020

சட்டப்பிரிவு 301 என்ன சொல்கிறது..??

Image
ஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது மரணம் உண்டாகும் என்று தெரிந்து ஒரு செயல் புரியப்படுகின்றது. அந்த செயலின் விளைவாக வேறு ஒருவருக்கு மரணம் சம்பவிக்கிறது. அனால் காரியத்தை செய்தவருக்கு இரண்டாவதாக குறிப்பிட்டுள்ள நபரை கொலை செய்ய வேண்டும் என்ற கருத்தோ அல்லது தன செயலால் அவருக்கு மரணம் சம்பவிக்கும் என்ற தெளிவோ இல்லை. ஆகவே, அவர் மீது கொலைக்குற்றம் சாராது. எண்ணியதற்கு மாறாக வேறு ஒரு நபர் மரணமடைந்தால் யாரைக்குறித்து செயல்பட்டாரோ, அதற்காகவே மரணம் விளைவித்த குற்றம் அவரைச்சாரும்.

சட்டப்பிரிவு 300 சொல்வது என்ன..??

Image
  இந்திய தண்டனை சட்டம் பிரிவு 300 (IPC Section 300 in Tamil) விளக்கம்: மரணத்தை விளைவிக்கு குற்றத்திற்கும், கொலைக்குற்றத்திற்கும் உள்ள வேறுபாடுகளை இந்த பிரிவில் காண்போம். மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை எப்பொழுது கொலைக் குற்றமாக கொள்ளலாம், எப்பொழுது கொள்ளக் கூடாது என்பதற்கு கீழே சில விதிவிலக்குகள் தரப்பட்டுள்ளன. அந்த விதி விலக்குகளுக்கு உட்பட்டு மற்ற சமயங்களில் மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை கொலைக் குற்றமாக கொள்ள வேண்டும். அப்படி கொலைக்குற்றமாகவே கொள்ளத்தக்க நிலைகள் என்னவென்றால்,  1. மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலை புரிந்து அதன் விளைவாக மரணம் ஏற்பட்டிருந்தால் அல்லது  2. உடலில் ஏற்படுத்தப்பட்ட காயத்தால் ஒருவர் மரணமடையலாம் காயத்தை உண்டாக்கியவருக்கு தான் ஏற்படுத்தும் காயத்தால் அந்த நபருக்கு மரணம் உண்டாகும் என்று தெரியும். தெரிந்தும் அந்த காயத்தை கருத்துடன் உண்டாகுதல் அல்லது.  3. ஒருவருடைய உடலை காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒரு காரியம் செய்யப்படுகிறது அதனால் மரணம் விளைவிக்கின்றது அப்படி உண்டாக்க வேண்டும் என்று எண்ணிய காயம் இயற்கையின் சாதாரண போக்...

அடிப்படை சட்ட அறிவு பெறுவோம்!

Image
  அடிப்படை சட்ட அறிவு பெறுவோம்! வழக்காளர்களிடம் 'இப்படிச் செய்யக் கூடாதே, ஏன் இப்படிச் செய்தீர்கள்!' என வழக்கறிஞர்கள் கேட்கும்போது, அவர்கள் சொல்லும் ஒரே பதில் என்ன தெரியுமா? 'ஓ, அப்படியா?, 'அப்படி செய்யக்கூடாது எனத் தெரியாது' என்பது மட்டுமே. உண்மையும் அதுவே. அவர்கள் செய்த ஒரு செயல், சட்டத்திற்கு ஏற்புடையதன்று என்பதை அறிந்திருப்பதில்லை. ஒருவேளை அவர்கள் செய்வது ஒரு குற்றச்செய்கை எனில், அறியாமையை நாம் ஒரு எதிர்வாதமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், அதுவே அவர்களின் அறிவுக்கு புகட்டப்படாத குற்றவியல் அற்ற அடிப்படைச் சட்டவிதிகள் என்றால் அவர்களின் அந்த அறியாமைக்கு யார் பொறுப்பு? 'Ignorance of law is no excuse' என்பது ஒரு அடிப்படை சட்ட விதி. அதாவது, 'எனக்கு இப்படி ஒரு சட்ட விதி இருப்பதே தெரியாது; எனவே அதை மீறியது என் தவறல்ல,' எனக்கூறி யாரும் தப்பிக்க முடியாது. அனைத்து சட்ட விதிகளையும், நாம் அறிந்தவர்கள் என்பதே சட்டத்தின் அனுமானம். ஆனால் சட்டம், விதிகளை ஓரளவிற்காவது நாம் தெரிந்து கொள்ள எளிதான வழி ஏதும் இருக்கிறதா? எனில் 'ஏதும் இல்லை' என்பதே வேதனையான உண...

அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா?

Image
  சட்டம் தெளிவோம்... அரசு அதிகாரி / ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டுமா? ஒரு அரசு என்பது மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது தான். மக்கள் நலன் கருதி பல்வேறு அரசுத்துறைகள் தனித்தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளின் மூலம் மக்கள் பணி செய்வதற்காக பலதரப்பட்ட அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் மக்களின் சேவகர்களே! மக்கள்தான் இவர்களுக்கு எஜமானர்கள் மக்களின் வரிப்பணத்தில் இருந்துதான் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. பணி ஓய்வு பெற்ற பின்னர் ஓய்வூதியமும் வழங்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களுக்கு பணிபுரியும் ஊழியர்கள்தானே தவிர அரசர்கள் அல்ல. ஆனால் உண்மையில் அரசு ஊழியர்கள் எப்படி பொதுமக்களிடம் நடந்து கொள்கிறார்கள்? அரசு ஊழியர்கள் தங்களை அரசர்கள் போல நினைத்து கொள்கின்றனர். இவர்களுக்கு ஏதோ வானளாவிய அதிகாரம் உள்ளது போல நினைத்துக் கொண்டு பொதுமக்களை அலைக்கழித்து மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள். உரிமைக்காக குரல் கொடுக்கும் சமூக ஆர்வலர்கள், நியாயத்தை கேட்கும் பொதுமக்கள் என அனைவர் மீதும், அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக ப...

அவசரகால தடைச்சட்டம் என்றால் என்ன..??

Image
அவசரகால தடைச்சட்டம் என்றால் என்ன..?? அவசர கால தடைச்சட்டம் என்றால் என்ன என்பதை கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள். இது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும் . இல்லையென்றால் மிகப் பெரிய தண்டனைகளுக்கோ, துப்பாக்கிப் பிரயோகத்திற்கோ இலக்காக நேரிடும். இந்த செய்தி அனைவருக்குமான ஒரு எச்சரிக்கை! இலங்கை அரசாங்கத்தால் நேற்றில் இருந்து அடுத்து வரும் பத்து நாட்களுக்கு அவசர காலத் தடைச் சட்டம் நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. அவசர கால தடைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் எங்கேயும் எதற்காகவும் சுடப்படலாம். இந்த அதிகாரத்தின் கீழ் முப்படையினரும் 24 மணி நேரமும் கடமையில் இருக்க வேண்டும். விடுமுறைகளை எடுக்க முடியாது. இந்த சட்டத்தின் கீழ் நபரொருவர் எந்த நேரத்திலும் எவ்வித காரணமின்றியும் கைது செய்யப்படலாம். அத்துடன் சந்தேகத்தின் பேரில் எவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முடியும். இரண்டு பேருக்கு அதிகமாக பொது இடங்களில் (தேசிய பாதுகாப்புக்கு பங்கம் இல்லாத அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய இடங்களில்) கூடுதல், திட்டம் தீட்டுதல், அதிக ஒலி எழுப்புதல் உட்பட ஆயுதங்களை உடமையில் (முகச் சவரம்...

ரிட் மனு என்பது என்ன..??

Image
 ரிட் மனு என்பது என்ன..?? WRITTEN ORDER என்பதைத்தான் ரிட் மனு என்று சொல்கிறோம். அதாவது அரசாங்கத்திடம் எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்க சொல்லி நாம் தாக்கல் செய்யும் மனுவிற்கு பெயர்தான் ரிட் மனு. எது எதுக்கெல்லாம் இந்த மனுவை தாக்கல் செய்யலாம் ? அரசாங்கம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு எதிராகவோ அல்லது அரசாங்க தலையிட்டு நடத்த வேண்டிய காரியங்களுக்கு ரிட் மனு தாக்கல் செய்யலாம். பொதுநல வழக்குகளை (PUBLIC INTEREST LITIGATION), பொதுநலன் பாதிக்கும் போது வழக்கு தொடரலாம். உங்கள் ஏரியாவில், சாலை ரொம்ப மோசமாக இருந்து, அதனை சரிசெய்யச் சொல்லி நீங்கள் அதற்குரிய துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும், அவர்கள் அது சம்பந்தமாக ஏதும், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்தத்துறை அதிகாரிக்கு, அதனை சரி செய்யச்சொல்லி உத்தரவு போட அரசாங்கத்தைக் கேட்கலாம். நீங்கள் குடியிருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் இருக்கின்ற ஒரு தொழிற்சாலையில் இருந்து புகை அல்லது தூசிகள் வந்து, அவை அந்தப்பகுதியின் சுற்றுச் சூழலை பாதித்தால், அருகில் உள்ள மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரியிடம் புகார் செய்யலாம். நீங்கள் புகார் அளித்து 60 நாட்களு...

எஸ்மா சட்டம் என்றால் என்ன தெரியுமா..??

Image
  எஸ்மா_சட்டம்_என்றால்_என்ன_தெரியுமா.?? 1981-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அத்தியவாசிய சேவைகள் பராமரிப்புச் சட்டம், ( #Essential_Services_Maintenance_Act – #esma) போராட்ட காலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தடுக்க மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரங்களை கொடுக்கிறது. அதன்படி, தபால், தந்தி, தொலைபேசி உள்ளிட்ட தொலைத்தொடர்பு, விமானம், ரயில், சாலை போக்குவரத்து போன்றவை அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் உணவுப் பொருள் கொள்முதல், விநியோகம் போன்ற துறைகளும், பாதுகாப்பு, துறைமுகங்கள் போன்றவையும் இந்த சட்டத்தின் கீழ் உள்ளன. மின்சாரம், குடிநீர், பால் விநியோகம், வங்கி போன்றவற்றையும் அத்தியாவசிய சேவைகளாக கருத இச்சட்டம் வகை செய்கிறது. அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம், ஸ்டிரைக் போன்ற போராட்டங்களில் இறங்குவதை இச்சட்டம் தடை செய்கிறது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதோ, போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதோ, தேவையேற்படும் பட்சத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பதோ கூட சட்ட விரோதம்தான். அவ்வாறு போராட்டத்தில் ஈடுப...

சைபர் கிரைம் எந்த வழக்கு என்ன தண்டனை தெரியுமா..??

Image
சைபர் கிரைம் எந்த வழக்கு என்ன தண்டனை தெரியுமா..?? பெருகி  வரும் குற்றச்செயல்கள்  பெரும்பாலானவை  சைபர்  கிரைம் குற்றமாகவே  தெரிய வ ந்துள்ளது. ஆன்லைன் சீட்டிங் தொடங்கி, பெண்களுக்கு கொடுக்கப்படும் பல  தொந்தரவுகள் சைபர்  கிரைமில் வருகிறது. இதில் எந்தெந்த  குற்றத்திற்கு, எந்த வழக்கு போடப்படுகிறது ? எந்த வழக்கின் கீழ்  குற்றச்செயல்கள்  பதிய  படுகிறதோ, அவர்களுக்கு  எந்த  மாதிரியான  தண்டனை  வழங்கப்படும் என்பதை  பார்க்கலாம். சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்? ஜ.டி. சட்டம் 2008ன் படி - மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைவாசம் அதே போல் மேலும், ஒரு லட்சம் முதல் ஜந்து லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். கீழ்கண்ட செக்ஷன்களில் கைதானால் – பெரும்பாலும் பெயில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது  பிரிவு - குற்றம் 66 - ஹேக்கிங் 66A - ஆபசமாக மெஸேஜ் அனுப்புவது 66B - கம்ப்யூட்டர்,   இன்டர்நெட் வழியாக திருடப்படுவது  66C - அடுத்தவர்களின் டிஜிட்டன் சைன், பாஸ்வேர்டுகளை திருடுவத...

வாகன ஓட்டி பயணிகளே உஷார்// சட்டம் தெளிவோம்...

Image
  #வாகன  (ஓட்டி, பயணி)களே.. #உஷார்! #வாகனஓட்டிகள் #அனைவரும்  #அவசியம்தெரிந்து #வைத்துகொள்ள #வேண்டிய #விழிப்புணர்வுபதிவு  ! கொஞ்சம் நீளமான பதிவு தான். ஆனால் உங்கள் சட்ட அறிவை தட்டி எழுப்பும்  விழிப்பறிவுணர்வு பதிவு என்பதினை கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம்.  ★மத்திய அரசால், நாடு முழுவதற்குமான ஒரு சட்டம் நாடாளு மன்றத்தில் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று விட்டால், அந்த சட்டமானது இந்தியா முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவே கருத வேண்டும். அதாவது அச்சட்டத்தின்படி, இந்திய குடிமக்கள் நடந்து கொள்ள வேண்டும். ★அப்படி நடக்காத குடிமக்களை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பிரத்தியோக அரசு ஊழியர்கள், அச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வழிவகைகளை கையாண்டு சட்டத்தை அமல்படுத்துவதில் அதிகப்படியான முனைப்பை காட்ட வேண்டும். ★அப்படி முனைப்பு காட்டாமல் அல்லது கண்டும் காணாமல் இருந்த காரணத்தால், ‘‘குற்றம் எதுவும் நிகழ்ந்தால் அக்குற்றத்திற்கு என்ன தண்டனையோ, அதில் பாதி தண்டனையை அந்த அரசு ஊழியருக்கும் விதிக்க வேண்டுமென இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 119 அறிவுறுத்துகிறத...

நிஜமான என்கவுன்டர் - நீங்களும் நிகழ்த்தலாம்...

Image
நிஜமான என்கவுன்டர் -  நீங்களும் நிகழ்த்தலாம்... என்கவுன்டர் என்ற உடனே நமது நினைவுக்கு வருவது ரவுடிகளும், நக்ஸலைட்டுகளும் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபடும்போது கொல்லப்பட்டதாக வரும் செய்திகள்தான். அனைத்து என்கவுன்டரிலும் சில துணை ஆய்வாளர்கள் கையில் கட்டுடன் மருத்துவமனையில் படுத்துக்கொண்டு பேட்டி அளிப்பதும், அது போலி என்கவுன்டர் என்று மனித உரிமை அமைப்புகள் புகார் அளிப்பதும் வாடிக்கையான நிகழ்ச்சிகள். Fightஒரு மனிதனை மற்றொரு மனிதன் கொலை செய்வதற்கு சட்டம் அதிகாரம் அளிக்கிறதா? என்பது பலரின் மனதுக்குள் உள்ள கேள்விதான். இந்த கேள்விக்குப் பதில் அளிக்குமுன்னர் வேறு சில சங்கதிகளைப் பார்ப்போம். வாழ்வின் பல்வேறு காலகட்டங்களிலும் நாம் பல அனுபவங்களை பெறுகிறோம். நமது கண் முன்பே திருடர்கள் திருடுவதைப் பார்த்தும் பார்க்காததுபோல் நம்மில் பலர் இருப்பதுண்டு. அந்த திருடன் நம்மை என்ன செய்வானோ என்ற பயம் மனதில் தோன்றி, நம்மை வேறுபக்கம் பார்க்கச் செய்து விடுகிறது. ஆனால் பிரசினை நமக்கே வந்து விட்டால் என்ன செய்வது? நமக்கோ, நமது உறவினர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து என்றால் என்ன செய்வது? பயணத்தின் போது நடுக...