அரசின் முக்கிய கடமைகள்
#தமிழ்நாடு #முத்தரையர் #முன்னேற்ற #சங்கம் அரசின் முக்கிய கடமைகள்: முன்னுரை; மக்களுடைய நலன்களைக் கருதி, அவர்களுடைய நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதையும் ஒழுங்குபடுத்துவதையும் தனது தலையாய கடமையாக நவீன கால அரசு கொண்டுள்ளது. அது அவ்வாறான கட்டுப்பாடுகளையும், ஒழுங்கு படுத்துதலையும் நடைமுறைப்படுத்த, பலவிதமான சட்டங்களையும் இயற்றுகிறது. மக்கள் தங்களுடைய ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் வண்ணம், அவர்களுக்கு வாய்ப்புகள் கிட்டும் வண்ணம் அவர்களுக்கு உரிய சுதந்திரத்தையும் அரசு உறுதி செய்கிறது. சமத்துவம் என்பது சுதந்திரம் மற்றும் நீதியோடு இயைந்தது. தனி நபர் ஒருவருக்கு ஆள்பவரால் அளிக்கப்பட்ட சட்டபூர்வமான எதிர்பார்ப்புகளையும் அதன் மூலம் அவர்களடையும் பலன்களையும் பெறும் முகத்தான் நீதி செயல்படுகிறது. அத்தனிநபருக்கு அளிக்கப்பட்ட உறுதிப்பாடுகளை நிறைவேற்றாமல் போனாலோ, அவருடைய உரிமைகள் பாதிக்கப்பட்டாலோ, அவ்வினங்களில் நீதி தலையிடுகிறது. சட்டத்தின் பொருள்: பொதுவாக புரிந்துகொள்ளப்பட்ட அளவில், சட்டம் என்பது, நீதிமன்றங்களால் நடைமுறைப்படுத்தும் விதிமுறைகள் அடங்கிய தொகுப்பு என பொருள்படும். இவை மட்டுமின்றி, ...