ஐபிசி 307
விளக்கம்
ஒருவருக்கு மரணத்தை உண்டாக வேண்டும் என்ற கருத்துடன் அல்லது தன் செயலால் அத்தகைய மரணம் சம்பவிக்கு என்ற தெளிவுடன் செயல் செய்யப்பட்டால், அது செய்யப்படும் சூழ்நிலையை அனுசரித்துக் கொலைக் குற்றம் செய்வதற்கான முயற்சி என்று முடிவாக்கப்படுகிறது. இதற்கு காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். அந்த குற்ற முயற்சியால் யாருக்காவது காயம் ஏற்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை அல்லது இதற்குமுன் சொல்லப்பட்டதைப்போல சிறைக்காவல் தண்டனை விதிக்கப்படும். இந்த பிரிவின் கீழ் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் காவலில் இருக்கும் பொழுது குற்றம் புரிந்து, அதனால் யாருக்காவது காயம் நேரிட்டால் அந்த கைதிக்கு மரண தண்டனை விதிக்கப்படும். உதாரணம்: ஒரு குழந்தையைக் கொல்ல வேண்டும் என்ற கருத்துடன் அதனை யாருமில்லாத ஓர் இடத்தில் போட்டுவிடுகின்றனர். அதனால் அந்தக் குழந்தை மரணம் அடையாவிட்டால், குழந்தையை அங்கே போட்டவன், இந்தப் பிரிவின் கீழ் குற்றவாளியாகிறான்.

Comments
Post a Comment